மேலும் 58 இணையவழி திருடர் கொழும்பில் கைது

மேலும் 58 இணையவழி திருடர் கொழும்பில் கைது

இணையவழி திருட்டுக்கள் செய்யும் இன்னோர் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சீன, இந்திய இணையவழி திருட்டு குழுக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் இன்று கைது செய்யப்படடோர் அனைவரும் இலங்கையினரே.

கைது செய்யப்பட்ட 58 பேரில் பிரதானிகளில் ஒருவர் 52 வயதுடைய கொழும்பு 7 வாசியான பெண் என்றும் இன்னொருவர் ராகமை பகுதில் வசிக்கும் 40 வயதுடைய ஆண் என்றும் கூறுகிறது CID.

இந்த குழுவின் கைதுக்கு இவர்களிடம் பணத்தை இழந்த தென் கொரிய அப்பாவி ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம். இந்த திருட்டு குழு தென் கொரிய அப்பாவியிடம் இருந்து 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் பெறுமதியான பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

மேற்படி அப்பாவி வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும், தூதரகம் மூலம் தென் கொரிய போலீசார் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் இலங்கை போலீசார் கொழும்பு Havelock ரோட்டில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி ஒன்றை முற்றுகையிட்டு கைதை செய்துள்ளனர். இந்த குழு இந்த அடுக்கு மாடிக்கு மாதம் 9 மில்லியன் ரூபாய்கள் வாடகை செலுத்துகிறதாம்.

இந்த சூது குழுவின் தலைமை வெளிநாட்டில் இருப்பதாகவே போலீசார் கருதுகின்றனர்.