சீனாவின் சனாதிபதி சீ ஜின்பிங் (Xi JinPing, வயது 69) மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் சனாதிபதியாக பதவியில் இருக்க உள்ளார். அதனால் இவர் 3 தடவைகள் சனாதிபதி பதவியில் இருக்கும் சனாதிபதி ஆகிறார். வெளிநாட்டவர் சீன தலைவரை சனாதிபதி என்று அழைத்தாலும், கட்சிக்குள் அவர் general secretary ஆவார்.
சீன அரசியலில் Politburo Standing Committee (PSC) என்பதே அதிகாரத்தின் உச்சம். மொத்தம் 7 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவர் General Secretary ஆவர். தற்போது அந்த பதவியில் இருப்பது சீ ஜின்பிங்.
Li Qiang என்பவர் தற்போது 2ம் இடத்தில் உள்ளார். Shanghai பிரதேச கட்சி தலைவரான (வயது 63) இவர் சீக்கு மிகவும் நெருக்கமானவர். வரும் மார்ச் மாதம் இவர் சீனாவின் Premier ஆக அறிவிக்கப்படலாம்.
Zhao Leji (வயது 65), Wang Huning (வயது 67), Cai Qi (வயது 66), Ding Xuexiang (வயது 60), Li Xi (வயது 66) ஆகியோர் ஏனைய 5 பேரும் ஆவர். இவர்கள் அனைவரும் வயதில் முதிந்தவர் ஆனபடியால் 2027ம் ஆண்டில் PSC குழுவில் இடம்பெறாத ஒருவர் சீன சனாதிபதி ஆகும் வாய்ப்புண்டு.
PSC க்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது 24 உறுப்பினரை கொண்ட Politburo குழு. இவர்களே அமைச்சர்கள் போல் இயங்குபவர்கள்.
அதற்கு அடுத்து உள்ள குழு 380 உறுப்பினர்களை கொண்ட Central Committee. இவர்களுக்கு அடுத்து உள்ளது 2,300 உறுப்பினர்களை கொண்ட National Party Congress. அதற்கும் அடுத்து உள்ளது சுமார் 97 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட கட்சி அங்கத்தவர் குழு.
மேலும் 5 ஆண்டுகளுக்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தொடர்ந்தும் தமது அரசியலை சீயுடன் தொடர தள்ளப்பட்டு உள்ளனர்.
அதேவேளை சீக்கு அடுத்த ஆசனத்தில் இருந்த முன்னாள் சனாதிபதியான Hu Jintao ஞாயிறுக்கிழமை சபை ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வகை நிகழ்வுகள் சீனாவில் வழமையாக நிகழ்வதில்லை. Hu அரசியல் எதிர்ப்பு காரணமாக வெளியேற்றப்பட்டாரா அல்லது சுகவீனம் காரணமாக வெளியேற்றப்பட்டாரா என்று அறியப்படவில்லை.