மேலும் $200 பில்லியனுக்கு அமெரிக்கா வரி

US_China

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி 10% வரி (tariff) அறவிட இன்று செய்வாய் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானப்படி மேலும் $200 பில்லியன் பெறுமதியான சீன பொருட்களுக்கு அமெரிக்கா 10% புதிய இறக்குமதி வரியை அறவிடும்.
.
இந்த $200 பில்லியன் இறக்குமதி வரிக்கு உள்ளாகும் 6,031 பொருட்களுள் உணவுகள், இரசாயணம், இலத்திரனியல் பொருட்கள், அலுவலக பொருட்கள் ஆகியனவும் அடங்கும்.
.
இந்த புதிய 10% இறக்குமதி வரிகள் வரும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
.
அமெரிக்கா முதலில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $34 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியை நடைமுறை செய்தது. அதற்கு பதிலடியாக சீனா அமெரிக்க பொருட்கள் மீது நிகர பெறுமதியில் புதிய இறக்குமதி வரியை நடைமுறை செய்தது.
.
இம்முறையும் சீனா நிகர தொகையில் புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க பொருட்கள் மீது நடைமுறை செய்யும் என்று கூறப்படுகிறது.
.
அதேவேளை அமெரிக்கா கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, தென்கொரிய, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இறக்குமதி வரி யுத்தத்தில் இறங்கி உள்ளது.

.