மேலுமொரு மாயன் அரண்மனை கண்டுபிடிப்பு

Mayan

மெக்ஸிகோ (Mexico) நாட்டின் National Institute of Anthropology and History (INAH) மேலுமொரு மாயன் (Mayan) அரண்மனை (Palace) ஒன்று Yucatan மாநில காட்டு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. Kuluba என்ற காட்டு பகுதியில் உள்ள இந்த அரண்மனை சுமார் 1,500 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது.
.
இந்த அரண்மனை 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அரண்மனையின் சுவர் 6 மீட்டர் (20 அடி) உயரம் கொண்டது. இதில் கீழ் மாடங்கள் (basement), படிகள் (stairways), தூண்கள் என்பனவும் உண்டு.
.
முற்கால நாகரீகங்களுள் மாயன் (Mayan) நாகரிகம் மிக முக்கியமானது. இது தற்போதைய Mexico, Guatemala, Belize, Honduras ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் பரவி இருந்தது.
.
மெக்ஸிகோவின் கன்கூன் (Cancun) நகருக்கு செல்லும் தற்கால உல்லாச பயணிகள் இலகுவில்  Chichen Itza பிரமிட், Tulum மாடம், Coba பிரமிட் ஆகிய மாயன் எச்சங்களை சென்று பார்வையிடலாம்.
.
ஸ்பானியர் வருகைக்கு பின் மாயன் நாகரிகம் முற்றாக அழிந்திருந்தாலும், அதற்கு முன்னரேயே மாயன் நாகரிகம் அழிய ஆரம்பித்தது.
.