இதுவரை காலமும் ஒரு இடதுசாரி கட்சி தலைவருக்கு வழங்காத கவனத்தை மேற்கு நாடுகள் இம்முறை சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுர குமார திசாநாயக்காவுக்கு (Anura Kumara Dissanayake) வழங்குகின்றன. குறிப்பாக மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் அனுராவின் வளர்ச்சியால் வியப்படைந்துள்ளன.
ஆகஸ்ட் 29ம் திகதி Bloomberg செய்தி நிறுவனம் “Sri Lanka Leftist Candidate Gains Ground With Anti-Corruption Push” என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டு இடம்பெற்ற Gota Go Gama புரட்சியாளர் அனுராவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக இந்த கட்டுரை கூறுகிறது.
ஆகஸ்ட் 27ம் திகதி Associated Press செய்தி நிறுவனம் “Sri Lanka’s Dassanayake a strong contender for president with his alliance’s focus on working class” என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதே தினம் ABC (American Broadcasting Corporation) செய்தி நிறுவனம் Associated Press கட்டுரையை மறுபிரசுரம் செய்துள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் சனாதிபதி ஆவதையே விரும்பும். இந்த நாடுகள் சொல்வதை செய்பவர் ரணில். ரணில் வெற்றி அடையாவிட்டால் அது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடியாக அமையும்.