மெக்ஸிகோவின் அரச எரிபொருள் நிறுவனமான PeMex இனது தலைமையகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்துக்கு 14 பேர் பலியாகியும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் இன்னமும் இடிபாடுகளுள் உள்ளனர். இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் பிற்பகல் 3:30 மணியளவில் மெக்ஸிகோவின் தலைநகர் Mexico City யில் இடம்பெற்றுள்ளது.
இந்த 51 மாடி கட்டடத்தின் நிலக்கீழ் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கும் எரி வாயு ஒழுக்கும் இவ் வெடிப்புக்கு காரணமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் வெடிப்பின் காரணம் உத்தியோக பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த புரட்டாதியில் மற்றுமோர் PeMex நிலையம் ஒன்றில் நடந்த வெடி விபத்துக்கு 30 பேர் பலியாகி இருந்தனர். 1984 ஆம் ஆண்டு PeMex வெடி விபத்துக்கு 300 பேர் வரை பலியாகி இருந்தனர்.