முன்னாள் பாகிஸ்தான் சனாதிபதி ஜெனரல் முஷாரப்புக்கு (Pervez Musharraf) பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி உள்ளது. ஆனால் முஷாரப் தற்போது டுபாயில் தங்கி உள்ளார். மேற்படி வழக்குக்கு முஷாரப் சமூகம் அளித்திருக்கவில்லை.
.
ஒரு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்குவது இதுவே முதல் தடவை.
.
1999 ஆம் ஆண்டு முஷாரப் இரத்தம் சிந்தாத இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்திருந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை அவரே பாகிஸ்தானின் சனாதிபதியாகவும் இருந்தார்.
.
2008 ஆம் ஆண்டில் பதவியை இழந்த இவர் வெளிநாடு சென்று பின் 2013 ஆம் ஆண்டில் நாடு திரும்பி இருந்தார். அவர் மீண்டும் 2016 ஆண்டில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இருந்தார்.
.
2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தை இடைநிறுத்தம் செய்து, இராணுவ ஆட்சியை அமைத்ததே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.
.