இந்தியாவின் மும்பாய் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் இந்தியாவின் Vistara விமானசேவை புதிதாக நேரடி சேவையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளது. Vistara விமான சேவை சிங்கப்பூர் விமானசேவையினதும் (Singapore Airlines), TATA நிறுவனத்தினதும் கூட்டு முயற்சியாகும்.
.
மும்பாயில் இருந்து 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படும் Vistara சேவையின் 4 ஆவது வெளிநாட்டு சேவை கொழும்புக்கான சேவையாகும். சிங்கப்பூர், டுபாய், Bangkok ஆகிய இடங்களுக்கும் Vistara சேவையை வழங்குகிறது.
.
இதன் கொழும்பு-மும்பய் இருவழி பயண கட்டணம் சுமார் $329.00 ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
.
Vistara சேவையிடம் தற்போது 31 விமானங்கள் உள்ளதாகவும், அது மேலும் 65 விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
|
|||||||||||||||||||