முன்னாள் ஸ்பெயின் (Spain) அரசர் Juan Carlos I ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பும் நோக்கில் UAE யில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ஸ்பெயின் அரச குடும்பம் இன்று திங்கள் கூறியுள்ளது. இவர் கடந்த 3 ஆம் திகதி UAE சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அரசர் மீது ஸ்பெயின், சுவிற்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் விசாரணை செய்கின்றன. முன்னாள் அரசர் Corinna zu Sayn-Wittgenstein-Sayn என்ற டென்மார்க் பெண் ஒருவருக்கு பெரும் தொகை பணம் வழங்கியதே விசாரணைக்கு காரணம். மறைந்த சவுதி அரசர் Abdullah ஸ்பெயின் அரசர் Carlos சுக்கு $100 மில்லியன் வழங்கியதாகவும், அதில் $65 மில்லியனை Carlos மேற்படி பெண்ணுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி பெண்ணுக்கும் Carlos சுக்கும் இடையில் உறவு இருந்ததாகவும், Carlos $65 மில்லியனை அன்பளிப்பாக வழங்கியதாகவும் அப்பெண் கூறுகிறார்.
2011 ஆம் ஆண்டு சவுதியில் உள்ள மெக்காவில் (Mecca) இருந்து மெடீனா (Medina) வரையான 450 km நீள தூரத்துக்கு அதிவேக ரயில் சேவை நிர்மாணிக்கும் பணியை ஸ்பெயின் நிறுவனங்களுக்கு வழங்கியதன் பின் வழங்கப்பட்ட இஞ்சமே $100 மில்லியன் என்று கருதப்படுகிறது.