அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார முதல்மை அதிகாரி போல் மனபோர்ட் (Paul Manafort) இன்று திங்கள் FBIயிடம் சரண் அடைந்துள்ளார். அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பதை விசாரிக்கும் விசாரணை குழுவின் நடவடிக்கையே இந்த சரணடையலுக்கு காரணம். இதனால் ஆவேசம் கொண்டுள்ளார் ஜனாதிபதி ரம்ப்.
.
ரம்பை ஜனாதிபதியாக்கும் நோக்கில், கெளரி கிளிண்ரனின் தப்புகளை ரஷ்யா பகிரங்கப்படுத்தி இருந்தது என்று அமெரிக்கா நம்பியது. அவ்வாறு ரஷ்யா செயல்பட அமெரிக்கர் உதவுவது குற்றம். அந்த குற்றத்தை விசாரிக்கும் பணி முன்னாள் FBI அதிகாரி றொபேர்ட் முல்லரிடம் (Robert Mueller) வழங்கப்பட்டது. அவரின் விசாரணை Paul Manafortடை கைது செய்யவுள்ள நிலையிலேயே அவர் சரண் அடைந்துள்ளார்.
.
Rick Gates என்ற Paul Manafortடின் வர்த்தக கூட்டாளியும் கூடவே சரண் அடைந்துள்ளார். Paul Manafort முன்னர் Ukraine நாட்டில் உள்ள ரஷ்ய ஆதரவு கட்சியுடன் இணைந்து செயல்பட்டவர்.
.
தனது தரப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதையிட்டு கூறுகிறார் ரம்ப். அவர் இந்த விசாரணையை ஒரு “witch hunt” என்று விபரித்து உள்ளார்.
.