முன்னாள் மலேசிய பிரதமருக்கு 12 ஆண்டு சிறை

முன்னாள் மலேசிய பிரதமர் Najib க்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், $49.3 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டு உள்ளன. 1MDB என்ற அரச முதலீட்டு பணத்தின் $4.5 பில்லியன் வரை காணாமல் போனதே மேற்படி வழக்குக்கு காரணம். இது 67 வயதுடைய Najib க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றாகும். Najib தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, Najib பிரதமராக பதவி வகித்த காலத்தில், 1 Malaysia Development Berhad (1MDB) என்ற அரசு பணத்தில் $9.8 மில்லியன் பணம் SRC International என்ற கிளை நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு, அதில் இருந்து Najib பின் சொந்த வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது.

உமநோ கட்சியில் Najib  தற்போதும் பலம் கொண்டிருந்தாலும், மேற்படி தீர்ப்பு காரணமாக அவர் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

சிறை தண்டனை பெற்ற Najib மலேசியாவின் இரண்டாவது பிரதமரான Abdul Razak Hussein என்பவரின் மூத்த மகன்.

1MDB முதலீட்டை கண்காணிப்பு செய்த அமெரிக்காவை தளமாக கொண்ட Golaman Sachs என்ற முதலீட்டு வங்கி ஏற்கனவே $3.9 பில்லியன் தண்டம் செலுத்தி தன்னை பாதுகாத்துள்ளது. Goldman Sachs உரிய நேரத்தில் களவுகளை பகிரங்கப்படுத்தி இருக்கவில்லை. Tim Leissner என்ற Goldman பங்காளி பண கடத்தலுக்கு உடந்தையாக இருந்தமையை ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றில் சட்டப்படி ஏற்றுக்கொண்டு உள்ளார்.
.