முன்னாள் தாய்வான் சனாதிபதி மா (Ma Ying-jeou, வயது 73) இன்று திங்கள் சீனா சென்றுள்ளார். தாய்வானின் சனாதிபதி ஒருவரோ அல்லது முன்னாள் சனாதிபதி ஒருவரோ சீனா செல்வது இதுவே முதல் தடவை.
தற்போதைய சனாதிபதி Tsai Ing-wen, ஒரு DPP (Democratic Progressive Party) கட்சி உறுப்பினர், மா சீனா செல்வதை வன்மையாக கண்டித்துள்ளார். மா ஒரு KTM (Kuomintang) கட்சி உறுப்பினர்.
மாவின் பயணம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று கூறப்பட்டாலும் அவர் சில சீன அதிகாரிகளை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சீன அரசு மேலும் அதிகாரிகளை சந்திக்க அழைத்தால் தான் சந்திக்கவுள்ளதாக மா கூறியுள்ளார்.
மாஓ (Mao Zedong) தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) 1949 வரை சீனாவை ஆண்ட CNP (Chinese National Party) கட்சியை விரட்டியபோது அவர்கள் தாய்வான் சென்று தற்போதைய தாய்வானை KTM கட்சி மூலம் ஆண்டனர்.
அண்மைக்காலங்களில் KTM கட்சி சீனாவுடன் உறவை நெருக்கமாக்க விரும்புகிறது. ஆனால் பிரிந்து சென்ற சில KTM உறுப்பினரால் 1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட DPP கட்சி அமெரிக்க அரவணைப்பில் உள்ளது.