இந்தியாவின் மிக பெரிய செல்வந்தர்களில் சகோதரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் இருவர். தந்தையின் சொத்தை முதலாக கொண்டு இருவரும் வர்த்தகத்தில் வளர்ந்தனர். அவ்வப்போது தம்முள்ளே மோதியும் கொண்டனர்.
.
அண்ணன் முகேஷின் மொத்த சொத்துக்கள் தற்போது சுமார் $52.9 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தனது மகளின் திருமண விழாவுக்கு மட்டும் அண்மையில் சுமார் $200 மில்லியன் செலவு செய்திருந்தார்.
.
ஆனால் அனில் அம்பானி விரைவில் தனது சொத்துக்களை இழந்து வந்தார். 2008 ஆம் ஆண்டில் $31 பில்லியன் ($31,000 மில்லியன்) சொத்தை கொண்டிருந்த அனில் அம்பானியிடம் தற்போது சுமார் $300 மில்லியன் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
.
அனில் அம்பானியின் Reliance Group என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் பெரும் நட்டத்தில் இயங்கியது. அந்த நிறுவனத்துக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை அனில் Ericsson என்ற நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்திருந்தார். அந்த நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய $80 மில்லியனை அனில் செலுத்த தவற, Ericsson நீதிமன்றம் சென்றது. பணம் செலுத்த தவறிய அனில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
.
இன்று செய்வாய் அண்ணன் முகேஷ் அம்பானி Ericsson னுக்கான கடனை செலுத்தி, அனில் அனில் அம்பானியை காப்பாற்றினார். கடந்த பெப்ருவரி மாதம் 20 ஆம் திகதி இந்திய மேல்நீதிமன்றம் இன்று செய்வாக்குள் Ericsson நிறுவனத்துக்கான பணம் செலுத்தப்படாதுவிடின், அனில் 3-மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
.