உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் கவனத்தை வைத்திருந்தாலும், வடகொரியா இன்று மீண்டும் குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது.
வடகொரிய நேரப்படி ஞாயிறு காலை இந்த ஏவலை வடகொரியா செய்துள்ளது.
.
கடந்த ஒரு மாத காலத்துள் வடகொரியா செய்து கொண்ட 6 வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த மாதம் 9 ஆம் திகதி மட்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது. பின் 27 ஆம் திகதி மேலும் 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது.
.
கடந்த வருட இறுதி பகுதியில் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் வடகொரியா தனது பொறுமையை விரைவாக இழக்கிறது என்று கூறப்பட்டது.
.
ஆனாலும் ரம்ப் தொடர்ந்தும் வடகொரியா தலைவர் கிம் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். கொரோனா தொடர்பான உதவிகள் தேவைப்பட்டால் தான் அவற்றை வழங்குவேன் என்று ரம்ப் கிம்முக்கு கூறி உள்ளார். ஆனால் கிம் அமெரிக்க உதவிகளை நிராகரித்து உள்ளார்.
.
கிமின் ஏவுகணை ஏவல்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கு விசனத்தை தோற்றுவித்தாலும், ரம்ப் இவ்விடயத்தை கண்டும் காணாமல் செயல்படுகிறார். ஈரானிடம் இல்லாத அணுவாயுதங்கள் தொடர்பாக மூர்க்கம் கொள்ளும் ரம்ப் வடகொரியாவுடன் நட்ப்புடன் செயல்பட விரும்புகிறார்.
.
வடகொரியாவுள்ளன கொரோனா தொடர்பான தரவுகளை வடகொரியா வெளியிடுவது இல்லை.
.