வேகமாக பரவி வரும் ஓமிக்கிறான் வகை கரோனா காரணமாக நெதர்லாந்து மீண்டும் கடுமையான முடக்கத்துக்கு செல்கிறது. ஞாயிறு நடைமுறைக்கு வரும் இந்த முடக்கம் தை மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும்.
அவசியம் அற்ற கடைகள், மதுபான இடங்கள், உடல் பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் முடக்க காலத்தில் மூடப்பட்டு இருக்கும்.
முடக்க காலத்தில் வீடுகளுக்கு 13 வயதுக்கு மேற்பட்ட 2 விருந்தாளிகள் மட்டுமே அழைப்படலாம். டிசம்பர் 24ம் திகதி முதல் 26 வரை மட்டும் 4 பேர் அழைக்கப்படலாம்.
பாடசாலைகள் ஜனவரி 9ம் திகதி வரை மூடப்படும். உணவகங்கள் எடுத்து செல்லப்படும் உணவுகளை மட்டுமே விற்பனை செய்யலாம்.
நெதர்லாந்தில் இதுவரை 2.9 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் 20,420 பேருக்கு மேல் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,616 பேர் அங்கு கரோனா தொற்றி உள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் சுமார் 89 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர். அதுதான் 1.5 மில்லியன் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.