மீண்டும் எண்ணெய்வள யுத்தம்

Oil_Well

கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டு அமைப்பான OPEC விடுத்த வேண்டுகோளுக்கு ரஷ்யா இணங்க மறுக்க, சவுதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரித்து, அதேவேளை தனது எண்ணெய் விலையை குறைத்தும் உள்ளது. அதனால் தற்போது எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு $6 முதல் $8 வரையால் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் எண்ணெய் விலை சுமார் 10% ஆல் குறைத்து உள்ளது. இந்த வருடத்தில் விலை சுமார் 30% ஆல் குறைந்து உள்ளது.
.
கொரோன வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார மந்த நிலை காரணமாகவும், பொருளாதார யுத்தத்தால் பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து உள்ளதாலும், சர்வதேச அளவில் எண்ணெய் பாவை குறைந்து உள்ளது. எரிபொருள் பாவனை குறைய, அதை விலையும் குறைத்து.
.
அளவுக்கு மீறி குறைத்த எண்ணெய் விலையை அதிகரிக்க சவுதி உட்பட OPEC நாடுகள் தமது உற்பத்தியை குறைக்க வேண்டின. ஆனால் ரஷ்யா தனது உற்பத்தியை குறைக்க மறுத்துவிட்டது. அதனாலேயே சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, விலையையும் குறைத்து உள்ளது.
.
எண்ணெய் விலையை உயர்த்தி வைத்திருப்பது அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தியாளருக்கு, குறிப்பாக அமெரிக்காவின் Shale எண்ணெய் உற்பத்தியாளருக்கு, சாதகமாக அமைகிறது என்று ரஷ்யா கருதுகிறது. எண்ணெய் விலை அதிகமாக இருந்தால் மட்டுமே அமெரிக்க, கனடிய எண்ணெய் உற்பத்தி இலாபகரமாக இருக்கும்.
.
ஒவ்வொரு நாட்டினதும் எண்ணெய் உற்பத்தி முறைக்கு ஏற்ப பரல் ஒன்றுக்கான அவர்களின் உற்பத்தி செலவு மாறுபடும். ரஷ்யாவுக்கு பரல் ஒன்றுக்கான உற்பத்தி செலவு $42 மட்டுமே. ஆனால் அமெரிக்காவின் shale எண்ணெய் பரல் ஒன்றுக்கான உற்பத்தி செலவு $68 ஆகும். அதனால் உலக எண்ணெய் விலை $68 க்கும் குறைவானால் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்க நேரிடும். அதனால் அவர்கள் தமது வர்த்தகத்தை நிறுத்துவார். உலகிலேயே மிக குறைந்த விலைக்கு எண்ணெய்யை உற்பத்தி செய்ய வல்ல நாடு சவுதி.
.