சுமார் 6 கிழமைகளுக்கு முன்னர் Huawei என்ற சீன தொழில்நுட்ப நிறுவனம் மீது ரம்ப் அரசு தடை விதித்து இருந்தது. அந்த தடையின்படி அமெரிக்க நிறுவனங்கள் Huawei நிறுவனத்துக்கு எந்தவொரு hardware, software களை விற்பனை செய்யக்கூடாது.
.
ஆனால் அண்மையில் சீன ஜனாதிபதியை ஜப்பானில் இடம்பெற்ற G20 அமர்வில் சந்தித்த ரம்ப் தனது கொள்கையை மாற்றிக்கொண்டார். தான் Huawei மீது விதித்த தடையை தற்போது இடைநிறுத்தி உள்ளார்.
.
Apple தவிர்ந்த ஏனைய smart phone கள் இன்று Google நிறுவனத்தின் Android என்ற operating systemத்தையே (OS) பயன்படுத்துகின்றன. Huawei நிறுவனமும் Android OS ஐயே பயன்படுத்துகிறது. அத்துடன் சில முக்கிய chip கள் Intel, Micron போன்ற அமெரிக்க நிறுவனங்களாலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
.
Huawei தனக்கு தேவையான மேற்கூறிய பாகங்களை தானே செய்ய வேகமாக செயல்பட்டு வந்தாலும், தற்போதைக்கு அமெரிக்காவின் பாகங்களையே நம்பி உள்ளது. அதனால் தடை இடைநிறுத்தம் Huawei நிறுவனம் இடர் இன்றி தொடர்ந்தும் செயல்பட வழிவகுக்கும்.
.
Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்ப வளர்ச்சியே அமெரிக்காவை பயம்கொள்ள வைத்துள்ளது. Huaweiயின் 5G மீதான தடை தொடர்பாக மாற்றம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
.