காசாவில் பணயம் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 6 பேரை இஸ்ரேல் இராணுவம் இன்று சனிக்கிழமை மீட்க முனைகிறது என்பதை அறிந்து கைதிகளை வைத்திருந்தவர்கள் பாடுகளை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூ மீது இஸ்ரேல் யூதர்கள் கடும் வெறுப்பை கொண்டுள்ளனர்.
இந்த 6 பேரில் ஒருவர் இஸ்ரேல், அமெரிக்க குடியுரிமைகளை கொண்டவர். தற்போது நடைபெறும் யுத்த நிறுத்த பேச்சுவார்தைகளின்படி இந்த கைதி முதலாம் கட்டத்தில் விடுதலை செய்யப்பட இருந்தவர்.
ஆனால் பலஸ்தீனர் மீது வெறித்தனமான துவேசம் கொண்ட நெற்ரன்யாஹூ கைதிகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் மீட்டால் யுத்த நிறுத்தம் செய்யாது பலஸ்தீனரை அழிக்கலாம் என்ற கனவில் மேற்படி 6 யூதர்களையும் மீட்க முனைந்து தோல்வி அடைந்துள்ளார். அதனாலே யூதர் தற்போது நெற்ரன்யாஹூ மீது பாய்கின்றனர்.
இஸ்ரேலின் பல நகரங்களில் நெற்ரன்யாஹூவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இவர்கள் நெற்ரன்யாஹூவிடம் மற்றவர்களை குற்றம் சாட்டாதே (stop blaming others) என்று கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்த இன்னோர் யூத கைதியான Ilana Gritzewsky யுத்த நிறுத்தத்தை நெற்ரன்யாஹூ இழுத்தடிப்பதால் இன்றைய 6 படுகொலைகளுக்கும் நெற்ரன்யாஹூவே காரணம் என்கிறார்.
அதேவேளை 3 இஸ்ரேல் போலீசார் ஆக்கிரமித்துள்ள West Bank பகுதியில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். Roni Shakuri என்ற இன்று மரணித்த ஒரு போலீசாரின் மகளும் ஒரு போலீஸ் என்றும், அந்த மகள் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸால் கொலை செய்யப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.