மியன்மாரில் (பர்மா) தொடரும் இராணுவ ஆட்சி எதிர்ப்புக்கு இன்று ஞாயிறு குறைந்தது மேலும் 38 பேர் பலியாகி உள்ளனர். மரணித்தோருள் சில போலீசாரும் அடங்குவர். சீனாவின் முதிலீடுகளில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் தீக்கு இரையாகின.
தொழிற்சாலைகளை கொண்ட Hlaingthaya என்ற வறுமையான பகுதியில் குறைந்தது 22 பேர் ஞாயிறு பலியாகி உள்ளனர். அங்கேயே சில சீன தொழிற்சாலைகள் தீயிடப்பட்டன. மியன்மார் இராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்று ஆர்பாட்டக்காரர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
சீன தூதுவராகம் ஆடை தொழிசாலை தீயிடப்பட்டதையும், சில சீன அதிகாரிகள் காயம் அடைந்ததையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சீன hotel ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானது.
இதுவரை குறைந்தது இரண்டு மியன்மார் போலீசாரும் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர்.