மியன்மாரில் (பர்மா) இடம்பெறும் இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் 12 ஆர்பாட்டக்காரர் சனிக்கிழமை பலியாகி உள்ளனர். பெப்ரவரி 1ம் திகதி முதல் இதுவரை அங்கு சுமார் 103 பேர் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர்.
அதேவேளை தப்பிய League of Democracy (NLD) பாராளுமன்ற உறுப்பினர் மக்களை புரட்சிக்கு அழைக்கின்றனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள Aung San Suu Kyi தலைமயிலான NLD கட்சியின் உறுப்பினரான Mahn Win Khaing என்ற பாராளுமன்ற உறுப்பினர் மறைவு இடம் ஒன்றில் இருந்து அனைத்து சிறுபான்மையினரையும் புரட்சியில் இணைய அழைத்துள்ளார். அவர் Committee for Representing Pyidaungsu Hluttaw (CRPH) என்ற புதிய அமைப்பின் கீழ் அறிவிப்பை செய்துள்ளார்.
ஆனால் மியன்மார் இராணுவம் CRPH அமைப்பை ஒரு சட்டவிரோத அமைப்பு என்று கூறி, அதனுடன் இணைந்து இயங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தென்கொரியா மியன்மாருடனான இராணுவ மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்த உள்ளதாக வெள்ளிக்கிமைமை கூறியுள்ளது.
மியன்மார் இராணுவத்துக்கு நெருக்கமான ரஷ்யாவும் மியன்மாருடனான இராணுவ மற்றும் தொழிநுட்ப உதவிகளை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் மியன்மாருக்கு எதிராக ஐ.நா. எடுக்கும் கடும் நடவடிக்கைகளையும் ரஷ்யா தடுத்து வருகிறது.