அமெரிக்காவின் Forbes என்ற செய்தி நிறுவனம் தயாரித்த 2024ம் ஆண்டுக்கான மிக பலமான 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியன முறையே 1ம், 2ம், 3ம் இடங்களில் உள்ளன.
இந்த கணிப்புக்கு பின்வரும் 5 பிரதான காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளன: 1) தலைமைத்துவம், 2) பொருளாதார ஆளுமை, 3) அரசியல் ஆளுமை, 4) சர்வதேச அணி ஆளுமை, 5) இராணுவ ஆளுமை.
பலம் கொண்ட முதல் 10 நாடுகள், அவற்றின் GDP வருமாறு:
1) அமெரிக்கா, $26.95 டிரில்லியன் ($26,950 பில்லியன்)
2) சீனா, $17.70 டிரில்லியன்
3) ரஷ்யா, $1.86 டிரில்லியன்
4) ஜெர்மனி, $4.43 டிரில்லியன்
5) பிரித்தானியா, $3.33 டிரில்லியன்
6) தென் கொரியா, $1.71 டிரில்லியன்
7) பிரான்ஸ், $3.05 டிரில்லியன்
8) ஜப்பான், $4.23 டிரில்லியன்
9) சவுதி அரேபியா, $1.07 டிரில்லியன்
10) UAE, $509.18 பில்லியன் (0.509 டிரில்லியன்)
அமெரிக்கா தொடர்ந்தும் வல்லமையை கொண்டிருக்க அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரதான காரணமாக உள்ளன.
சீனாவின் ஆளுமை அதிகரிப்புக்கு சனாதிபதி சீயின் Belt and Road திட்டம் ஒரு பிரதான காரணியாக உள்ளது. தொழிநுட்பத்திலும் சீனா வேகமாக வளர்ந்துள்ளது.
இந்தியா 12ம் இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தை மட்டுமே கணக்கில் கொண்டால் இந்தியாவின் GDP 5ம் இடத்தில் உள்ளது. ஆனால் பாதுகாப்பு போன்ற விசயங்களில் இந்தியா வேறுநாடுகளை நம்பி உள்ளது. உதாரணமாக இந்தியாவின் அடுத்த சந்ததி யுத்த விமானங்கள் பிரான்சிடம் இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன.