மிகப்பெரிய ஐரோப்பா-ஜப்பான் வர்த்தக உடன்படிக்கை

EU

ஐரோப்பிய ஒன்றியமும் (EU), ஜப்பானும் நேற்று மிகப்பெரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கி உள்ளன. இதை விரும்பாத அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், ஜப்பானை பொருளாதரம் மூலம் தண்டிக்க முனையலாம் என்றும் நம்பப்படுகிறது.
.
இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட மிக பெரிய வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கைக்குள் சுமார் 600 மில்லியன் மக்கள் அடங்குவர். அத்துடன் இந்த உடன்படிக்கை சுமார் $150 பில்லியன் வர்த்தகத்தையும் உள்ளடக்கும்.
.
இந்த உடன்படிக்கை 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
.
உதாரணமாக, தற்போது ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பானிய கார்களுக்கு 10% இறக்குமதி வரி அறவிடுகிறது. இந்த புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பின், இந்த வரி முற்றாக நீக்கப்படும். பதிலாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு விவசாய பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும்.
.

இந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டிருந்தாலும், ஜப்பானில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அழிவுகள் காரணமாக பின்போடப்பட்டு இருந்தது. ஜப்பானின் வெள்ள அழிவுகளுக்கு சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர்.
.