மலேசியா பிரதமர் $700 மில்லியன் திருடல்?

Najib

அண்மையில் அமெரிக்காவின் The Wall Street Journal என்ற பத்திரிகை வெளிட்ட செய்தி ஒன்றில் மலேசியாவின் பிரதமர் Najib Razak U$ 700 மில்லியன் பணத்தை திருடி இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
பிரதமர் Najib 2009 ஆம் ஆண்டில் மலேசியாவின் அபிவிருத்திக்காக 1MDB (1Malaysia Development Fund) என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கென வங்கி கணக்கையும் ஆரம்பித்திருந்தார். ஆனால் அண்மையில் இந்த அரச வங்கி கணக்கில் இருந்து Najib இன் சொந்த சுவிஸ் வங்கி கணக்கு ஒன்றுக்கு U$ 700 மாற்றப்பட்டுள்ளது. இதை அறிந்த சுவிஸ் பிரதமர் Najib இன் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
.
Najib பதவியைவிட்டு விலக வேண்டும் என்று மலேசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மலேசியாவை 22 வருடங்கள் ஆண்ட முன்னாள் பிரதமர் Mahathir Mohamed உம், தனது 90 வயதில், இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
.

Najib தரப்பினர் இந்த பணம் மத்திய கிழக்கில் இருந்து கிடைத்த அரசியல் நன்கொடை என்றுள்ளனர்.
.