இலங்கையர் மூவரின் உடல்கள் மலேசியாவில் பொலிஸாரால் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையிலும் இருந்துள்ளன.
கோலாலம்பூரை அண்டிய Sentul என்ற பகுதியிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் மாடியில் உள்ள இந்த வீட்டில் இருந்து நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் அவல சந்தங்கள் வெளியேற, அயலவர் அதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மூன்று ஆண்களின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.
அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த இலங்கை தம்பதிகள் தற்போது பொலிஸாரின் காவலில் உள்ளனர்.
கொலைகளின் பின் இரண்டு வெளிநாட்டவர் அவ்விடத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் Sentul போலீசார் கூறுகின்றனர். அத்துடன் சந்தேக நபர்கள் இருவரும் Klang, Selangor பகுதியில் வாழும் இலங்கையர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
கொலைகளுக்கான காரணத்தை போலீசார் இதுவரை அறியவில்லை.