ஐ.நா. தயாரித்து வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி சுட்டியில் (Human Development Index, HDI) இலங்கை 0.782 புள்ளிகளை பெற்று 73ம் இடத்தில் உள்ளது. 2020ம் ஆண்டில் இலங்கை 75ம் இடத்தில் இருந்தது.
இந்த கணிப்பில் 0.50 முதல் 0.70 வரையான புள்ளிகளை கொண்ட நாடுகள் medium வளர்ச்சி கொண்டவையாக கருதப்படுகிறது. அதனால் இலங்கை medium வளர்ச்சியை கொண்ட நாடாகிறது. அத்துடன் இலங்கையில் சராசரி வாழ்கை காலம் 76.4 ஆண்டுகளாக உள்ளது.
இக்கணிப்பில் 0.962 புள்ளிகளை கொண்ட சுவிற்சலாந்து 1ம் இடத்திலும், 0.961 புள்ளிகளை கொண்ட நோர்வே 2ம் இடத்திலும், 0.959 புள்ளிகளை கொண்ட ஐஸ்லாந்து 3ம் இடத்திலும் உள்ளன.
ஆசியாவில் ஹாங்காங் 0.952 புள்ளிகளை பெற்று 4ம் இடத்திலும், சிங்கப்பூர் 0.939 புள்ளிகளை பெற்று 12ம் இடத்திலும், உள்ளன.
சீனா 0.768 புள்ளிகளை பெற்று 79ம் இடத்தில் உள்ளது.
பங்களாதேசம் 0.661 புள்ளிகளை பெற்று 129ம் இடத்தில் உள்ளது.
இந்தியா 0.633 புள்ளிகளை பெற்று 132ம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 0.544 புள்ளிகளை பெற்று 161ம் இடத்தில் உள்ளது.
தென் சூடான் 0.385 புள்ளிகளை பெற்று 191ம் இடத்தில் உள்ளது.