மத்தியகிழக்குக்கு மேலும் 3,500 அமெரிக்க படைகள்

Soleimani

நேற்று ஈரானின் ஜெனரல் Qasem Soleimani அமெரிக்காவினால் ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்துக்கு அருகே ஏவுகணைகள் மூலம் படுகொலை செய்ததை தொடர்ந்து அங்கு நிலவும் நெருக்கடிகளை கையாள மேலும் 3,500 அமெரிக்க படையினர் (82nd Airborne Division) செல்கின்றனர். மேற்படி தாக்குதலுக்கு தாம் பலத்த பதிலடி (a very big price) வழங்கவுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
.
கடந்த புதன்கிழமையும் 650 அமெரிக்க படையினர் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டு இருந்தனர். அதற்கு முன் சுமார் 5,000 அமெரிக்க படையினர் ஈராக்கில் நிலைகொண்டு உள்ளனர்.
.
மேற்படி தாக்குதலின் பின் எண்ணெய் விலை சுமார் 4% ஆல் அதிகரித்து உள்ளது. அதேவேளை ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனடியா வெளியேறும்படி கேட்டுள்ள அமெரிக்கா அவர்களை பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது. நெதர்லாந்தும் தனது நாட்டவரை உடனடியாக ஈராக்கில் இருந்து வெளியுறுமாறு கூறியுள்ளது.
.
பஹ்ரைன் நாட்டு விமான சேவையான Gulf Air ஈராக்கின் பக்தாத் நகருக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
.
Soleimani யுடன் பயணித்த ஈராக்கின் Popular Mobilisation Forcesஎன்ற ஆயுத குழுவின் உபதலைவரும் கொலை செய்யப்பட்டு இருந்தார். இவர்களின் மரண சடங்குகள் சனிக்கிழமை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
.