மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம்

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக பொதுவாகன் இந்துக்களான பெரும்பாண்மை Meitei குழுக்களுக்கும் பொதுவாக கிறித்தவர்களான சிறுபான்மை Kuki குழுக்களுக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெறுகின்றன.

மே மாதம் 3ம் திகதி இந்த வன்முறைகள் ஆரம்பமாகி இருந்தாலும், மேற்படி ஊர்வலம் மே மாதம் 4ம் திகதி இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த வீடியோ தற்போதே இணையங்களில் வெளியாகி உள்ளது.

பாதிக்கப்பட்டோர் மே மாதம் 18ம் திகதி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். ஆனால் போலீஸ் விரைவாக செயற்ட்படவில்லை.

ஒரு 21 வயது பெண்ணும், ஒரு 42 வயது பெண்ணுமே இவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளாகினர்.

இதுவரை மணிப்பூரில் ஆளும் பா.ஜ. கட்சி கலவரங்களை அடக்க முழுமூச்சாங்க இயங்கவில்லை. அத்துடன் பிரதமர் மோதியும் இந்த கலவரம் தொடர்பாக கவலை எதையும் தெரிவித்து இருக்கவில்லை.

ஆனால் தற்போது இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி Chandrachud தனது கூற்றில் இந்திய அரசு மேற்படி நிர்வாண ஊர்வலத்தை விசாரணை செய்யாவிடில், உயர்நீதிமன்றம் விசாரணை செய்யும் என்று மிரட்டியுள்ளார். மோதியும் முதல் முறையாக மேற்படி ஊர்வலத்தை கண்டித்து உள்ளார்.

தற்போது Khuirem Herodas என்ற 32 வயது Meitei இனத்தவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்கிறது போலீஸ்.