இந்தியா, Hong Kong, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, டுபாய் போன்ற இடங்களில் எல்லாம் தனது கிளைகளை இயக்கிவரும் சரவணபவான் உணவகம் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 1947 இல் பிறந்த ராஜகோபால் என்பவரால் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் இவர் ஓர் பலசரக்கு கடையை நடாத்தி வந்தார்.
1972 இல் இவர் முதலாவது திருமணத்தை செய்திருந்தார். பினர் 1994 இல் தனது வேலையாள் ஒருவரின் மனைவியை தனது இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருந்தார். பின் 1999 இல் தனது மேற்பார்வையாளர் ஒருவரின் இளைய மகள் ஜீவஜோதியை 3வது திருமணம் செய்ய முனைந்தார். அம்முயற்சி ஒரு கொலைக்கு காரணமாகியது.
ராஜகோபாலின் விருப்பத்தை வெறுத்த ஜீவஜோதி சாந்தகுமார் என்பரை திருமணம் செய்ய விரும்பினார். 2001-09-28 அன்று ஜீவஜோதி வீடு வந்த ராஜகோபால், அவர்களுக்கு 2 நாள் காலக்கெடு விதித்தார். இருவரும் தப்பி ஓட முனைந்தபோது இருவரையும் கடத்திய ராஜகோபாலன் சாந்தகுமாரை தாக்கியுள்ளார். சாந்தகுமார் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். ஆறு நாட்களில் இருவரும் மீண்டும் கடத்தப்பட்டனர்.
ராஜகோபாலன் சாந்தகுமாரை கொலை செய்ய அமர்த்திய கையாள் டேனியல் சாந்தகுமாரை தப்பி ஓட வைத்துவிடு, கொலை செய்துவிட்டதாக ராஜகோபாலனிடம் தெரிவித்தார். ஆனால் சாந்தகுமார் குடும்பம் மீண்டும் ராஜகோபாலனை அணுகி சமரசம் பேச முன்வந்தனர். இறுதியில் சாந்தகுமார் கொடைக்கானலில் பிணமாக மீட்க்கப்பட்டார்.
2002 இல் ராஜகோபால் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. 2004 இல் 10 வருட சிறை தண்டனை பெற்றார். ஆனால் 9 மாதத்துள் இன்னொரு நீதிமன்று சுகவீனம் காரணம்காட்டி அவரை சிறை தண்டனையை இரத்து செய்தது. 2009 இல் சென்னை நீதிமன்றம் மீண்டும் அவரது தண்டனையை நடைமுறைப்படுத்தியது. ஆனால் 3 மாதத்துள் அவர் மீண்டும் பிணையில் வெளியேறினார். அவரது வழக்கு இழுத்தடிப்பால் அவர் சுதந்திரமாக வாழ்க்கையை நடாத்தி வருகிறார்.
2008 இல் அவரது மகன் சிவகுமார் போலி பத்திரங்கள் தயாரித்து அமெரிக்காவுக்கு ஆட்கடத்தில் செய்வதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டிருந்தார்.