சுமார் 100 வருடங்களின் பின் முதல் முறையாக மகோ ரெயில் நிலையம் முதல் ஓமந்தை ரெயில் நிலையம் வரையான தண்டவாளம் இந்தியாவின் உதவியுடன் $91.26 மில்லியன் செலவில் புதிப்பிக்கப்படவுள்ளது. சுமார் 130 km நீள மேற்படி பாதையில் தற்போது 60 km/p வேகத்தில் செல்லும் வண்டிகள் புதிய பாதையில் 120 km/h வேகத்தில் செல்லக்கூடுயதாக இருக்கும்.
.
இந்த உடன்படிக்கை நேற்று ஜூலை 18 ஆம் திகதி இலங்கை அரசுக்கும், இந்தியாவின் IRCOM International Ltd நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.
.
மேற்படி திட்டத்துக்கான செலவின் 31.37% முதலீட்டை இந்தியா நன்கொடையாகவும், மிகுதியை 1.75% வட்டி கொண்ட 20 வருட கடனாகவும் வழங்கும்.
.
சுமார் 2 வருடங்கள் நீடிக்கவுள்ள இந்த புதுப்பிப்பு பணிகளுக்கு 12 பாதை மாறக்கூடிய நிலையங்கள், 7 நின்று செல்லும் நிலையங்கள் 78 வீதிக்கடவைகள் என்பனவும் உள்ளாகும்.
.
அதேவேளை சுமார் 120 km/h வேகத்தில் செல்லவல்ல வண்டிகளை இலங்கை சீனாவிடம் இருந்து கொள்வனவும் செய்கிறது.
.