அமெரிக்காவின் பல்கலைக்கழக அனுமதி ஊழல் தொடர்பாக மேலும் ஒரு சம்பவம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இந்த புதிய ஊழல் விவகாரம் அமெரிக்காவின் பிரபல Harvard University தொடர்பானது.
.
Harvard பல்கலைக்கழகத்தின் fencing என்ற வாள் ஏந்தி விளையாடும் விளையாட்டுக்கு பயிற்சி வழங்குபவரான (coach) Peter Brand என்பருக்கு அப்பகுதியில் ஒரு வீடு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அந்த வீட்டின் சந்தை விலை சுமார் $549,300 ஆக இருந்தும், Jie Zhao என்பவர் $989,500 வழங்கி அந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார். அதாவது சுமார் இரண்டு மடங்கு விலைக்கு அந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார்.
.
அவ்வாறு இரண்டு மடங்கு விலைக்கு கொள்வனவு செய்த வீட்டில் Jie Zhao என்றைக்கும் குடியிருந்தது இல்லை. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சுமார் 17 மாதங்களின் பின், Jie Zhao அந்த வீட்டை மீண்டும் சந்தை விலைக்கு ($665,000) விற்பனை செய்துள்ளார். அதனால் Jie Zhao பெரு நட்டம் அடைந்துள்ளார்.
.
அதேவேளை Jie Zhaoவின் மூத்த மகன் Harvard பல்கலைக்கழகத்தின் fencing விளையாட்டு அணியில் அனுமதி பெறுவதன் மூலம் Harvard அனுமதியை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. Jie Zhaoவின் இரண்டாவது மகனும் fencing மூலம் Harvard அனுமதி பெற்றுள்ளார்.
.
1995 ஆம் ஆண்டு அமெரிக்க குடி உரிமை பெற்ற Jie Zhao, 2003 ஆம் ஆண்டு வேறு சிலருடன் இணைந்து ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார். அந்நிறுவனத்தில் கொண்ட தமது உரிமையை இவர்கள் 2012 ஆம் ஆண்டு $80 மில்லியனுக்கு விற்பனை செய்து இருந்தனர்.
.
2013 ஆம் ஆண்டில் Jie Zhao அமெரிக்காவின் National Fencing Foundation என்ற அமைப்புக்கு $1 மில்லியன் நன்கொடையும் வழங்கி இருந்தார்.
.