மகனின் உடல் பொதியுள், இந்திய CEO அம்மா கைது

மகனின் உடல் பொதியுள், இந்திய CEO அம்மா கைது

Suchana Seth என்ற அம்மா, வயது 39, தனது 4 வயது மகனை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பெங்களூரை தளமாக கொண்ட The Mindful AI Lab என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO ஆவார்.

இவர் அருகில் உள்ள கோவா மாநிலத்துக்கு சனிக்கிழமை தனது மகனுடன் சென்றுள்ளார். ஆனால் திங்கள் அவர் வீடு திரும்பும் வேளையில் அவரின் மகன் அவருடன் இருக்கவில்லை.

விடுதி அறையில் இரத்தக்கறை இருந்ததை அறிந்த போலீசார் தாய் சென்ற வாடகை காரின் சாரதியை அருகில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்று செல்ல கூறினார். அங்கு போலீசார் பயண பொதி ஒன்றில் மகனின் உடலை கண்டுள்ளனர்.

2010ம் ஆண்டு திருமணமான இவர் 2020ம் ஆண்டு விவாகரத்துக்கு பதிவு செய்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. மகன் 2019ம் ஆண்டு பிறந்திருந்தார்.

பிரிந்து வாழும் மகனின் தந்தை விபரத்தை அறிந்தவுடன் இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்துள்ளார்.