PKK (Kurdistan Workers’ Party) என்ற குர்திஸ் இனத்தை சார்ந்த ஆயுத குழு 1978 ஆம் ஆண்டில் இருந்து துருக்கிக்கு (Turkey) எதிராக போராடி வந்திருந்தது. Cold-War காலத்தில்முளைத்த எல்லா போராட்ட குளுக்களைப்போல் இதுவும் ஆரம்பத்தில் மேற்கு சார்பான துருக்கிக்கு எதிரான ஓர் சோஷலிச குழுவாகவே கொள்கைகளை கொண்டிருந்தது.
பல மேற்கு நாடுகள் இந்த குழுவை பயங்கரவாத குழுவாக தடை செய்திருந்தாலும் மறைமுகமாக தமது நாடுகளில் செயல்படவிட்டன (அதையே புலிகளுக்கும் செய்திருந்தனர்). துருக்கியின் இன் நண்பன் அமெரிக்காகூட தேவைகள் ஏற்படும்போது PKK இக்கு உதவியும், அதனிடம் இருந்து உதவி பெற்றுறும் வந்துள்ளது. குறிப்பாக சதாம் மீது போர் தொடுத்தபோது PKK அமெரிக்காவுக்கு உதவியது, அமெரிக்கா PKK இக்கு உதவியது.
1948 ஆம் ஆண்டு பிறந்த இந்த குழுவின் தலைவர் Addullah Ocalan 1999 ஆம் ஆண்டு கென்யாவின் தலைநகர் நைரோபியில் வைத்து CIA யினதும் Mossad டினதும் உதவியுடன் துருக்கியால் கைது செய்யப்பட்டு இருந்தார். இவருக்கு பின்னர் மரணதண்டனை வழங்கப்பட்டாலும் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. துருக்கியின் சிறையில் இருந்து இவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்று வியாழக்கிழமை (25/04/2013) துருக்கியில் நிலைகொண்டுள்ள தமது போராளிகளை அடுத்த மாதம் (வைகாசி) 8 ஆம்திகதி முதல் ஈராக் பக்கம் எடுக்கப்போவதாக PKK கூறியுள்ளது. ஈராக் சென்ற பின்னரேயே ஆயுத கையளிப்பு பற்றி அறிவிப்பர். இவர்களின் ஈராக் நோக்கிய நகர்வு பல மாதங்களாக நடைபெறும்.
இந்த யுத்தத்துக்கு இதுவரை சுமார் 40,000 மக்கள் பலியாகி இருந்துள்ளனர்.