இந்த ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சிகளை கைவிட்டார் விவேக் ராமசாமி. Republican கட்சி சார்பில் போட்டியிட தான் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதை அறிந்தே இவர் போட்டியில் இருந்து விலகினார்.
திங்கள் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற உட்கட்சி தேர்தலில் இவர் 4ம் இடத்தை அடைந்திருந்தார். அங்கு இவருக்கு 7.1% வாக்குகளே கிடைத்தன.
போட்டியில் இருந்து வெளியேறிய விவேக் 51.3% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள ரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தான் சனாதிபதி ஆக தெரிவு செய்யப்பட்டால் ரம்ப் மீதான அனைத்து குற்ற சாட்டுக்களையும் விலக்கி கொள்வேன் என்றும் விவேக் கூறியிருந்தார்.
இதற்கு சில தினங்கள் முன்னர் ரம்ப் தனது கூற்று ஒன்றில் விவேக் ஒரு fraud என்று விபரித்திருந்தார்.