பொல்லு கொடுத்து அடி வாங்குகிறார் மக்கிறான்?

பொல்லு கொடுத்து அடி வாங்குகிறார் மக்கிறான்?

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியினர் பெருமளவில் தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் தனது நாட்டுக்கான தேர்தலை உடனே அறிவித்து இருந்தார்.

நேற்று ஞாயிரு இடம்பெற்ற பிரெஞ்சு தேர்தலில் சனாதிபதி மக்கிறானின் கட்சி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. Marine Le Pen தலைமயிலான வலதுசாரி National Rally கட்சி முன்னணியில் உள்ளது.

நேற்று இடம்பெற்றது தேர்தலின் முதல் சுற்று. முதல் சுற்றில் 50% வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோர் தெரிவு செய்யப்படுவர். எவரும் குறைந்தது 50% வாக்குகள் பெறாத தொகுதிகளில் முதல் சுற்றில் அதிகம் வாக்குகள் பெற்ற இருவரும், குறைந்தது 12.5% வாக்குகள் பெற்றவர்களும் இரண்டாம் சுற்றில் போட்டியிடுவார். இரண்டாம் சுற்றில் அதிகம் வாக்குகள் பெறுபவர் தெரிவு செய்யப்படுவார், இம்முறை 50% வாக்குகள் தேவையில்லை.

முதல் சுற்றில் Le Pen கட்சியின் வலதுசாரி கூட்டணி 34% வாக்குகளை பெற்றுள்ளது என்று கணிப்புகள் கூறுகின்றன. மக்கிறான் கட்சி கூட்டணி 29% வாக்குகளை பெறுகிறது.

கடந்த பிரென்சு பொது தேர்தல் 2022ம் ஆண்டு இடம்பெற்றதால் அடுத்த தேர்தல் 2027ம் ஆண்டே இடம்பெறவேண்டும். ஆனால் மக்கிறான் 3 ஆண்டுகள் முந்திக்கொண்டு தோல்வியை தழுவக்கூடும். 

மக்கிறானின் கட்சி தோற்றாலும், அவர் சனாதிபதியாக பதவியை தொடரலாம். ஆனால் அவரின் கட்சி பதவியில் இல்லாத நிலையில் அதுவும் கடினமாகலாம்.