இந்தியாவின் உதவியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதேசமான பொலநறுவையில் ஓர் பல்கலாச்சார, மும்மொழி பாடசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான தூதுவர் Taranjit Singh Sandhuவும் இலங்கையின் கல்வி அமைச்சின் செயலாளர் Sunil Hettiarachchiயம் செய்து கொண்டார்கள்.
.
.
இந்த பாடசாலை கட்டுமானத்துக்கான செலவை, சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள், இந்தியா வழங்கும். இப்பாடசாலைக்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர். இவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்.
.
.
இந்த திட்டம் ஜனாதிபதி சிறிசேனவின் இனங்களுக்கு இடையேயான ஒருமைப்பாடு, இணக்கம் ஆகிய கொள்கைகளுக்கு வலுவூட்டுமாம்.
.