பொருளாதார வல்லமையில் இலங்கை 85ம் இடத்தில்

WorldEconomicForum

World Economic Forum இன்று தனது 2017-2018 காலத்துக்கான Global Competitiveness Index அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த கணிப்புக்கு மொத்தம் 137 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டன.
.
சுவிற்சலாந்து 5.86 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. இந்த நாடே 2016-2017 காலத்திலும் 5.81 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருந்தது.
.
அமெரிக்கா 5.85 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 5.71 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2016-2017 காலத்தில் அமெரிக்கா 3ம் இடத்திலும், சிங்கப்பூர் 2ம் இடத்திலும் இருந்தன.
.
தெற்காசியாவில் 4.59 புள்ளிகளை பெற்று இந்தியா 40 ஆம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக பூட்டான் 4.10 புள்ளிகளை பெற்று 82 ஆம் இடத்தில் உள்ளது. 2016-2017 காலத்தில் பூட்டான் 97ம் இடத்தில் இருந்தது.
.
இம்முறை இலங்கை 4.08 புள்ளிகளை பெற்று 85 ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. 2016-2017 காலத்தில் இலங்கை 4.19 புள்ளிகளை பெற்று 71 ஆம் இடத்தில் இருந்தது.
.
2.87 புள்ளிகளை பெற்று யேமென் (Yemen) 137 ஆம் இடத்தில் உள்ளது.
.
நாடு ஒன்றின் பொருளாதார வல்லமையை கணிக்க மொத்தம் 12 வகையான காரணிகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 12 காரணிகளுள் அடிப்படை கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து கட்டமைப்புகள், சுகாதாரம், முதலீடு என பல அடங்கும்.
.
காரணிக
1. Institutions
2. Infrastructure
3. Macroeconomic environment
4. Health and primary education
5. Higher education and training
6. Goods market efficiency
7. Labor market efficiency
8. Financial market development
9. Technological readiness
10. Market size
11. Business sophistication
12. Innovation