அமெரிக்க சனாதிபதி பைடென் சில விசயங்களில் நாளுக்கு ஒரு நாடகம் செய்கிறார். ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற பத்திரிகையாளர் கொலையின் பின் சவுதியை ஒரு ‘pariah’ நாடு என்று சாடிய பைடென் சீன மற்றும் ரஷ்ய ஆளுமை சவுதியில் நுழைவதை தவிர்க்க அண்மையில் சவுதி சென்று உறவாடி இருந்தார்.
அடிமனதில் சவுதியின் தலைவர் Mohammed bin Salman மீது பைடெனுக்கு நாட்டம் எதுவும் இல்லை என்றாலும் சவுதின் அரசை தன் கைவசம் கொண்டுள்ள சல்மானை தன் பக்கம் இழுத்து சவுதியின் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வைப்பதே பைடெனின் சவுதி பயண நோக்கம்.
ஆனால் அண்மையில் சவுதி OPEC நாடுகளுடன் இணைந்து நாள் ஒன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பரல்களால் குறைத்து உள்ளது. இச்செயல் ரஷ்யாவுக்கு நலமாகவும், மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் அமைத்துள்ளது.
தற்போது சவுதி மீது மீண்டும் விசனம் கொண்ட பைடென் மீண்டும் சவுதி மீது சிறிய தடைகளை விதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சவுதிக்கான அமெரிக்க ஆயுத விற்பனையை பைடென் குறைக்கக்கூடும்.
சவுதியுடனான உறவை சனாதிபதி பைடென் மீளாய்வு செய்கிறார் என்று வெள்ளைமாளிகை பேச்சாளர் John Kirby இன்று செவ்வாய் கூறியுள்ளார்.
2002ம் ஆண்டு குயாராத்தில் இஸ்லாமியர் மீது பா.ஜ. கட்சியின் மாநில அரச ஆத்தாவுடன் வன்முறைகள் இடம்பெற்றதால் அக்கால குயாராத் முதலமைச்சர் மோதி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு இருந்தார். அனால் மோதி பிரதமர் ஆனபின் அவரை செங்கம்பளம் விரித்து, howdy Modi என்று கூறி வரவேற்று இருந்தது அமெரிக்கா.