அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும் சீன சனாதிபதி சீக்கும் இடையில் மீண்டுமொரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan முயற்சித்து வருகிறார்.
கடந்த 2 தினங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் தங்கியுள்ள Jake Sullivan சீனாவின் Wang Yi உடனும் உரையாடி உள்ளார். பைடென்-சீ சந்திப்புக்கான திட்டமிடல் பணிகள் வரும் கிழமைகளில் இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று கூறுகிறது.
சுமார் 8 ஆண்டுகளின் பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சீனா சென்றது இதுவே முதல் தடவை.
ரஷ்ய-யூக்கிறேன் யுத்தம், தென் சீன கடல், தாய்வான் போன்ற பல விசயங்களில் சீனாவின் பங்கு அமெரிக்காவுக்கு அவசியம்.