தற்போது ஐ.நா. அமர்வுக்கு அமெரிக்கா சென்று இருக்கும் இந்திய பிரதமர் மோதி, அங்கு அமெரிக்க உதவி சனாதிபதி கமலா ஹாரிஸை இன்று வியாழனும், சனாதிபதி பைடெனை நாளை வெள்ளியும் வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க அரசியவாதிகள் மட்டுமன்றி Qualcomm, Adobe, First Solar, General Atomics, Blackstone ஆகிய வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளையும் மோதி சந்திக்கவுள்ளார்.
சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை வளர்ப்பதே அமெரிக்காவின் நோக்கம். ஆனாலும் இந்தியாவை AUKUS அமைப்பில் அமெரிக்கா உள்ளெடுக்கவில்லை.
2002ம் ஆண்டு குஜராத்தில் சுமார் 1,000 இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அக்கால குஜராத் முதல்வர் மோதி அமெரிக்காவுள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் 2014ம் ஆண்டு மோதி பிரதமர் ஆனபின் தடை சலசலப்பு இன்றி நீக்கப்பட்டது. இன்று அவர் அமெரிக்காவுள் மட்டுமன்றி, வெள்ளை மாளிகையுள்ளும் நுழைகிறார்.