அமெரிக்க சனாதிபதி பைடெனின் மகன் Hunter Biden அவர் மீது சுமத்தப்படட 3 குற்றச்சாடுகளிலும் குற்றவாளி என்று நேற்று செவ்வாய் நீதிமன்றால் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
மேற்படி குற்றங்களுக்கு அதிகூடிய தண்டனைகளாக 25 ஆண்டுகள் சிறையும், $750,000 குற்றப்பணமும் அறவிடப்படலாம். ஆனால் இது ஹன்ரரின் முதலாவது குற்றம் ஆனபடியால் குறைந்த அளவு தண்டனையே வழங்கப்படும்.
அமெரிக்காவில் சாதாரண குடிமகனும் பெரும் துப்பாக்கிகளை சட்டப்படி கொள்வனவு செய்யலாம். Right to bear arms என்பது அமெரிக்காவின் சரத்தில் உள்ள உரிமை.
ஆனால் குற்றவாளிகள், மனநோயாளிகள், போதைக்கு அடிமையானோர் போன்ற சிலருக்கு ஆயுத கொள்வனவு உரிமை இல்லை.
Hunter தனது ஆயுதம் கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றில் தான் போதைக்கு அடிமையானவர் என்பதை கூறாது மறைத்து ஆயுதத்தை கொள்வனவு செய்துள்ளார். அதுவே அவரின் குற்றம்.
அடுத்த அமெரிக்க தேர்தலில் ஒருவர் குற்றவாளியாக தீர்ப்பு கூறப்பட்டவராகவும், மற்றயவரின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு கூறப்பட்டவராகவும் இருப்பர்.
Hunter முன்னர் இரண்டு ஆண்டுகளில் $1.5 மில்லியன் உழைத்ததாகவும் அதற்கு $100,000 வரி செலுத்தவில்லை என்றும் அமெரிக்க வரி திணைக்களம் கூறுகிறது. இந்த வழக்கு வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறும்.
ஹன்டரின் முற்கால போதை பாவனைக்கு மன்னிப்பு வழங்கி (waiver) இவரின் 43ம் வயதில் அமெரிக்க கடற்படையில் இணைய அனுமதிப்படிருந்தார். ஆனால் இணைந்து ஒரு கிழமைக்குள் அவரின் சலத்தில் cocaine இருந்தமை அறியப்பட்டு கடற்படையில் இருந்து நீக்கப்பட்டார்.