பெருவில் சீனாவின் மிகப்பெரிய அதிநவீன துறைமுகம்

பெருவில் சீனாவின் மிகப்பெரிய அதிநவீன துறைமுகம்

சீனா தென் அமெரிக்க நாடான பெருவில் (Peru) இந்த கிழமை மிகப்பெரிய, அதிநவீன துறைமுகம் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த துறைமுகம் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவ நலன்களுக்கு மிக அச்சுறுத்தல் ஆகியுள்ளது.

பெருவின் தலைநகர் லீமாவுக்கு (Lima) வடக்கே சுமார் 80 km தூரத்தில் Chancay என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகம் சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்தின் கீழ் சீனாவின் Cosco Shipping நிறுவனத்தால் $1.3 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.

இந்த துறைமுகத்தில் ஒரே நேரம் 15 பெரிய கப்பல்கள் பொருட்களை இறக்கி, ஏற்ற முடியும். இங்கு பெருமளவு பணிகள் automation செய்யப்பட்டுள்ளது. அதனால் சீனாவுக்கும் இந்த துறைமுகத்துக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து காலம் 35 தினங்களில் இருந்து 23 தினங்களாக குறைகிறது. அதனால் இரு முனைகளிலும் பொருட்களின் விலை சுமார் 20% ஆல் குறையும் என்றும் கணிக்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தில் இருந்து முதலாவது கப்பல் அடுத்த கிழமை சீனாவுக்கு பயணமாகும். தென் அமெரிக்காவின் சோயா போன்ற விவசாய பொருட்களும், இரும்பு ore போன்ற கனிய பொருட்களும் சீனாவுக்கு மிகவும் அவசியமானவை.

பெருவுக்கு மட்டுமன்றி Chile, Ecuador, Colombia, Brazil ஆகிய நாடுகளுக்கும் இந்த துறைமுகம் ஊடாக வணிக போக்குவரத்து சேவை வழங்க சீனா $3.5 பில்லியன் செலவில் ரயில் பாதைகளையும் அமைக்கிறது.

தென் அமெரிக்காவில் சீனா ஆளுமை கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதேவேளை சீனாவின் முயற்சிகளை தடுக்கவும் அமெரிக்காவால் முடியவில்லை.