பெரும் நெருக்கடியில் உள்ள மோதி ரஷ்யா பயணம் 

பெரும் நெருக்கடியில் உள்ள மோதி ரஷ்யா பயணம் 

இந்த கிழமை Kazakhstan நாட்டில் இடம்பெற்ற Shanghai Corporation Organization (SCO) அமர்வுக்கு செல்லாது தவிர்த்த பிரதமர் மோதி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் உரையாட மாஸ்கோ பறக்கிறார்.

யூக்கிறேன் யுத்தம் தொடர்பாகவும் மோதி பூட்டினுடன் உரையாடலாம் என்றாலும், இந்த விசயம் மோதிக்கு பிரதானமானது அல்ல. மோதிக்கு நெருக்கடி தருவது SCO அமைப்பு தனது பிரதான நாணயமாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்த முனைவதே.

மேற்கு நாடுகளின் தடைகள் காரணமாக ரஷ்ய தனது இறக்குமதிகள் அனைத்தையும் சீனா மூலமே செய்கிறது. வேறு எந்த நாடும் இதை செய்யும் நிலையில் இல்லை. 

அத்துடன் ரஷ்யா அமெரிக்க நாணயமான டாலரை ஏற்றுமதி/இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது. இதனால் ரஷ்யா சீனாவின் நாணயத்தில் முற்றாக தங்கி உள்ளது. அதனால் SCO அமைப்பின் இரண்டு பிரதான நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் சீனாவின் நாணயத்தை SCO நாடுகளின் பொது நாணயமாக பயன்படுத்த விரும்புகின்றன. ஈரானும் அதை விரும்புகிறது.

ஆனால் சீன நாணயம் வளர்ச்சி அடைவதை இந்தியா விரும்பவில்லை. இந்திய ரூபாயும் பலம் அற்றதாக உள்ளதால் இந்தியா அமெரிக்க டாலரை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புகிறது.

ரஷ்யா மிக மலிவாக எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்தாலும், இந்தியா அதை எந்த நாணயம் மூலம் கொள்வனவு செய்யலாம் என்ற நெருக்கடியில் உள்ளது.

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் ஆதரித்து, சீனாவை ஆதரியாத வகையில் திட்டம் ஒன்றை இந்தியா இந்த விசயத்தில் கொண்டிருக்க முடியாது.