பெரிய அளவில் ஆடம்பர கல்யாண விழாக்கள் நடாத்துவோரை 10% வரி செலுத்த நிர்பந்திக்கும் வகையில் சட்டம் ஒன்றை நாடளவில் நடைமுறைப்படுத்த இந்தியா முனைகிறது. ஏட்டிக்கு போட்டியாக ஆடம்பர கல்யாண விழாக்கள் செய்யப்படும்போது பெரும் விரையங்கள் ஏற்படுவதாகவும், வறியோரையும் அவர்களின் நிலைக்கு அப்பால் செலவழிக்க தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.
.
.
காங்கிரஸ் M.P. Ranjeet Ranjan (பீஹார் மாநிலம்) அறிமுகப்படுத்தும் இந்த சட்டத்தின்படி, சட்டம் நடைமுறைக்கு வந்தால், 500,000 இந்திய ரூபாய்களுக்கு மேல் (சுமார் $7500.00) திருமணத்துக்கு செலவிடுவோர் 10% வரியை அரசுக்கு செலுத்துதல் வேண்டும். அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முனையப்படுகிறது.
.
.
அண்மையில் Janardhana Reddy என்ற முன்னாள் அமைச்சர் தனது மகளின் திருணத்துக்கு 500 கோடி இந்திய ரூபாய்கள் செலவு செய்திருந்தாராம்.
.
.
ஜம்மு-காஸ்மீர் மாநிலமும் இவ்வாறு ஒரு சட்டத்தை ஏற்கனவே அமைத்துள்ளது. வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அங்கு கல்யாணம் ஒன்றுக்கு வரும் விருந்தினர் தொகையும், தயாரிக்கப்படும் உணவின் அளவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மணமகள் பகுதி ஆகக்கூடியது 500 விருந்தினரையும், மணமகன் பகுதி 400 விருந்தினரையும் மட்டுமே அழைக்கலாம்.
.
.
பாகிஸ்தானிலும் இவ்வாறு சட்டம் உண்டாம். உணவை விரயமாக்குவது அங்கு பாரதூர குற்றமாகும்.
.