இந்த மாதம் 25 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடனான புகையிரதம் ஒன்று வடகொரியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றதாக செய்திகள் வெளிவந்திருந்த. அத்துடன் அந்த புகையிரதம் 24 மணி நேரத்துக்குள் திரும்பி வடகொரியா சென்றது.
.
.
இந்த புகையிரதத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பயணித்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.
.
.
இன்று சீனாவின் அரசு சார்பு பத்திரிகைகள் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்று, சீனாவின் ஜனாதிபதி சீ ஜின் பிங்கை (Xi Jinping) சந்தித்ததை உறுதி செய்துள்ளன. சீன ஜனாதிபதியும் அவரின் மனைவியும் கிம் ஜோங் உன்னையும் அவரின் மனைவியையும் வரவேற்றதாக சீன செய்திகள் கூறுகின்றன.
.
.
இந்த சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வம் அற்ற சந்திப்பு என்றாலும், சீனாவின் பிரதமர் Li Keqiang, Wang Huning, உதவி ஜனாதிபதி Wang Qishan ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கு கொண்டிருந்தனர்.
.
.
2011 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்திருந்த கிம் ஜோங் உன் தனது நாட்டுக்கு வெளியே சென்றது இதுவே முதல் தடவை. கிம் ஜோங் உன் வெளிநாட்டு தலைவர் ஒருவரை சந்தித்தவும் இதுவே முதல் தடவை.
.