பெய்ஜிங்கில் மிகப்பெரிய விமான நிலையம்

DaXing

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் (BeiJing) தெற்கே புதிதாக இன்னோர் விமான நிலையம் வரும் செப்டம்பர் மாதம் முதல் சேவைக்கு வரவுள்ளது. விரைவில் உலகின் மிக பெரிய விமான நிலையமாக DaXing என்று அழைக்கப்படும் இந்த புதிய விமான நிலையம் விளங்கும்.
.
பெய்ஜிங் வடகிழக்கே 2008 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கென நிறுவப்பட்ட Beijing Capital International விமான நிலையம் தற்போது முழு அளவில் (full capacity) இயங்குவதாலேயே புதிய DaXing விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
.
முதற்கட்டத்தில் புதிய DaXing விமான நிலையம் 4 ஓடுபாதைகளை கொண்டிருக்கும். பின்னர் அத்தொகை 9 ஆக உயரும். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் வருடம் ஒன்றில் சுமார் 100 மில்லியன் பயணிகளை கையாளும்.
.
DaXing விமான நிலையம் சுமார் $12 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது.
.
2022 ஆம் ஆண்டளவில் சீனாவின் விமான பயணிகளின் தொகை அமெரிக்காவின் தொகையையிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அடுத்த வருடம் (2020 ஆம் ஆண்டில்) சீனாவின் மொத்த பயணிகள் தொகை சுமார் 720 மில்லியன் ஆக இருக்கும்.
.
தற்போது உலகின் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக அமெரிக்காவின் Atlanta விமான நிலையம் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் அது சுமார் 107 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள Beijing Capital விமான நிலையம் 101 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது.
.
2018 பயணிகள் தொகை:
Rank Airport Country Passengers
1 Atlanta International Airport US 107,394,029
2 Beijing Capital Airport China 100,983,290
3 Dubai International Airport UAE 89,149,387
4 Los Angeles Airport US 87,534,384
5 Tokyo Haneda Airport Japan 87,131,973
6 O’Hare International Airport US 83,339,186
7 London Heathrow Airport UK 80,126,320
8 Hong Kong Airport Hong Kong 74,517,402
9 Shanghai Pudong Airport China 74,006,331
10 Paris-Charles de Gaulle Airport France 72,229,723
11 Amsterdam Airport The Netherlands 71,053,157
12 Indira Gandhi Airport India 69,900,938
13 Guangzhou Baiyun Airport China 69,769,497
14 Frankfurt Airport Germany 69,510,269
15 Dallas/Fort Worth Airport US 69,112,607
16 Seoul Incheon Airport Republic of Korea 68,350,784
17 Istanbul Atatürk Airport Turkey 68,192,683
18 Soekarno-Hatta Airport Indonesia 66,908,159
19 Singapore Changi Airport Singapore 65,628,000
20 Denver International Airport US 64,494,613
21 Suvarnabhumi Airport Thailand 63,378,923
22 John F. Kennedy Airport US 61,909,148
23 Kuala Lumpur Airport Malaysia 59,959,000
24 Madrid Barajas Airport Spain 57,891,340
25 San Francisco Airport US 57,793,313