பென்ரகனின் இரகசிய சீன எதிர்ப்பு கரோனா பரப்புரை

பென்ரகனின் இரகசிய சீன எதிர்ப்பு கரோனா பரப்புரை

அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் கரோனா உக்கிரமாக இருந்த காலத்தில் சீனாவுக்கும், Sinovac என்ற சீன கரோனா தடுப்பு மருந்துக்கும் எதிராக social media பொய் கணக்குகள் மூலம் பரப்புரை செய்துள்ளது என்று Reuters செய்தி நிறுவனம் கண்டறிந்து உள்ளது.

உதாரணமாக பிலிப்பீன் நாட்டுக்கு சீனா Sinovac மருந்து ஆகியவற்றை வழங்க இருந்த வேளை பென்ரகன் பிலிப்பீன் நாட்டின் பிரதான மொழியான Tagalog மூலம் சுமார் 300 Twitter பொய் social media கணக்குகளை ஆரம்பித்து பொய் பரப்புரை செய்துள்ளது. 

அந்த கணக்குகள் “COVID came from China and the VACCINE came from China, don’t trust China!” என்றெல்லாம் பரப்புரை செய்துள்ளன.

மேற்படி பொய் கணக்குகள் 2020ம் கோடை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. அந்த கணக்குகளை Twitter/X தற்போது மூடி உள்ளது.

https://www.reuters.com/investigates/special-report/usa-covid-propaganda/