பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் 1 மில்லியன் யூரோவை ($1.05 மில்லியன்) பணமாக ஒரு பெட்டியில் (suitcase) பெற்றார் என்று Clarence House கூறியதாக பிரித்தானிய Sunday Times இன்று கூறியுள்ளது. இந்த பணம் Sheikh Hamad bin Jassim என்ற முன்னாள் கட்டார் (Qatar) பிரதமரால் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் இந்த பணம் உடனடியாக Prince of Wales Charitable Fund என்ற நிதியத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுள்ளது. அதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.
பிரித்தானிய இளவரசருக்கு இவ்வாறு மொத்தம் 3 மில்லியன் யூரோக்கள் கட்டார் பிரதமரால் காசாக 3 பொதிகளில் 2011-2015 காலப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது. ஒரு தடவை 1 மில்லியன் யூரோ பிரித்தானிய Fortnum and Mason என்ற பலசரக்கு கடை பையில் வழங்கப்பட்டு உள்ளது.
இத்தொகை பணம் ஏன் காசாக பொதிகளில் வழங்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.
இளவரசரின் நிதியம் பணம் பெற்று Mahfouz Marei Mubarak bin Mahfouz என்ற சவுதி நபருக்கு பிரித்தானிய குடியிருமை பெற உதவியது என்ற குற்றச்சாட்டும் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விசாரணை காரணமாக Michael Fawcett என்ற நிதியத்தின் CEO ஏற்கனவே பதவியில் இருந்து விலகி உள்ளார்.