ரஷ்யா யுகிரைன் யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை குறுகிய காலத்தில் அடைய முடியாத நிலையில் இன்று புதன்கிழமை பூட்டின் மேலதிக ரஷ்ய reserve படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பூட்டின் போரை ஒரு நிறுத்தாமல் மேலதிக படைகளை அழைப்பதை கடுமையாக வெறுக்கின்றன மேற்கு நாடுகள்.
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் முதல் தடவையாக ரஷ்யா reserve படைகளை போருக்கு அழைக்கிறது. இதை அறிந்த அமெரிக்காவின் பேச்சாளர் John Kirby பூட்டின் யுத்தத்தில் வெற்றி கொள்ளாது திண்டாடுவதை தாம் அறிவோம் என்றுள்ளார். அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் தமது படைகளை அனுப்பாவிடினும், தம்மிடம் உள்ள மிகவும் புதிய ஆயுதங்களை யுகிரேனுக்கு அள்ளி வழங்குகின்றனர்.
ரஷ்யாவால் அழைக்கப்படும் புதிய படைகள் சுமார் 1,000 km நீள எல்லையை பாதுகாக்கும் என்று பூட்டின் கூறியுள்ளார்.
பூட்டின் தனது 7 நிமிட உரையில் தான் தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த தாயார் என்றும் கூறியுள்ளார். அவர் அணு ஆயுதங்களையே குறிப்பிடுகிறார் என்று மேற்கு அவரை சாடியுள்ளது.
பூட்டினின் இந்த நகர்வு ரஷ்யாவிலும் பெரும் ஆதரவை பெறவில்லை. ரஷ்யர்கள் யுத்தத்துக்கு ஆதரவு வழங்கினாலும், இராணுவ நகர்வுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. சிலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு தப்பி ஓடவும் முனைகின்றனர்.
ஆக்கிரமித்து உள்ள சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க வெள்ளிக்கிழமை முதல் வாக்கெடுப்பு நிகழ்த்த உள்ளார் பூட்டின்.