தமிழ்நாட்டின் சென்னை நகருக்கு நீர் வழங்கும் இரண்டு ஏரிகளில் புழல் ஏரி ஒன்று. மழை நீரால் நிரம்பும் புழல் ஏரி சுமார் 4.6 மில்லியன் மக்களை கொண்ட சென்னை நகருக்கு நீரை வழங்கி வருகிறது.
.
இந்த நீர்நிலை 1876 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நீர் வழங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. இது சுமார் 18 சதுர km பரப்பளவை கொண்டது. இது அதி கூடிய ஆழமான இடத்தில 15.3 மீட்டர் ஆழத்தை கொண்டது.
.
கடந்த வருடம் ஜூன் மாதம் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட செய்மதி படம் ஒன்றும், கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்ட படம் ஒன்றும் அந்த ஏரி வேகமாக இழந்துவரும் நீர் அளவை காண்பிக்கின்றன.
.
சென்னைக்கு நீர் வழங்கும் இரண்டாவது நீர்நிலையான செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நீரை இழந்து வருகிறது.
.
பண வசதி உடையோர் அண்டைய மாநிலங்களில் இருந்து நீரை கொள்வனவு செய்கிறார்கள்.
.
அதேவேளை தொலைவில் உள்ள மேட்டூர் அணையும் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் வீராணம் ஏரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது.
.
படம்: Maxar Technologies.
.