வரும் 2023ம் ஆண்டு புத்தாண்டில் உலக சனத்தொகை 7.9 பில்லியன் ஆக இருக்கும் என்கிறது அமெரிக்காவின் Census Bureau. 2022ம் ஆண்தில் இருந்த உலக சனத்தொகையிலும் இது 73.7 மில்லியன் அதிகம்.
அதாவது 2022ம் ஆண்டுக்கான உலக சனத்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டுக்கான உலக சனத்தொகை அதிகரிப்பு 0.9% மட்டுமே. அடுத்த ஆண்டுக்கான அதிகரிப்பு மேலும் குறையலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு செக்கனுக்கும் 4.3 குழந்தைகள் பிறக்க, 2 பேர் மரணிப்பர் என்றும் அமெரிக்க Census கூறுகிறது.
அதன்படி ஒவ்வொரு செக்கனுக்கும் உலக சனத்தொகை 2.3 பேரால் அதிகரிக்கும். அதனால் 2023ம் ஆண்டில் உலக சனத்தொகை மேலும் சுமார் 72.5 மில்லியனால் (2.3 x 3600 sec x 24 hrs x 365 days = 72, 532,800) அதிகரிக்கலாம்.
இந்நிலை தொடர்ந்தால் உலக சனத்தொகை உச்சத்தை அடைகிறது என கருதலாம்.
வரும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் சனத்தொகை 334.2 மில்லியன் ஆக இருக்கும். 2002ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5 மில்லியனால் அங்கு சனத்தொகை அதிகரிக்கிறது. அது 0.0045% அதிகரிப்பு மட்டுமே.